கறிவேப்பிலை உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள் (Benefits of curry leaves)..!!
இதயம் பலம் பெறும்:
- கறிவேப்பிலையைப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.
- கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
கொழுப்புக்கள் கரையும்:
- காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை( curry leaves) இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
- இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின்(RBC) அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
ஜீரண கோளாறுகள் சரியாகும்:
- கறிவேப்பிலையுடன், சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் ஜீரண கோளாறுகள் சரியாகும் .
சர்க்கரை நோய் குணமாகும்:
- உலர்ந்த கறிவேப்பிலை (curry leaves), சுக்கு, மிளகு, சீரகம். உப்பு தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து தினமும் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.
- சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்:
- கருவேப்பிலை, நிலாவரை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் பெருவயிறு மறையும், மலச்சிக்கல் தீரும்.
- நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
- கருவேப்பிலை( curry leaves)யை உலர்த்தி பொடி செய்து அதில் பெருங்காயத்தூள் சேர்த்து தினமும் உணவுக்குப் பிறகு 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.
நன்றாக பசி எடுக்கும்:
- கருவேப்பிலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
- கருவேப்பிலையை, மிளகாய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வெடிப்பு குணமாகும்.
- கருவேப்பிலை பொடி செய்து, எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
- மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து சாப்பிட்டால் மந்தம் மலக்கட்டு நீங்கும்.
- கருவேப்பிலையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் பித்தம், மூலம் குணமாகும்.
- உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லி முள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பாலில் கலக்கிக் குடித்தால் உடல் வலிமை பெறும்.
சளி முறிந்து வெளியேறிவிடும்:
- சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்:
- கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி கீரை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
- கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
- கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் நரைமுடி மறையும்.
- கருவேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி கறுப்பாக வளரும்.