கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) நோய் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது: தமிழ்நாடு அரசு..!! - Tamil Crowd (Health Care)

கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) நோய் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது: தமிழ்நாடு அரசு..!!

 கருப்பு பூஞ்சை நோய்  (BLOCK FUNGI)- வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது: தமிழ்நாடு அரசு..!!

கருப்பு பூஞ்சை (BLOCK FUNGI)நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதுவரை தமிழ்நாட்டில் 900க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான அரசாணை வெளியாகி உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

Degree-முடித்தவர்க்கு ரூ.32,000/- ஊதியத்தில் வேலை..!!  

அதன்படி ரத்தத்தின் சர்க்கரை அளவை நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், கொரோனா சிகிச்சை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் உள்ள நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் இது பொருந்தும் குறிப்படப்பட்டுள்ளது.

  1. நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளும் கூட ஸ்டெராய்ட் எடுப்பதால் ரத்தத்தில் இருக்க கூடிய சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும். அதனால் அவர்களது சர்க்கரை அளவையும் கண்காணிக்க வேண்டும்.
  2. இரவு உணவுக்கு முன்பாகவும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.
  3. சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு ஸ்டெராய்ட் உடன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும்.
  4. மூன்று வேளை உணவுக்கு முன்னதாக நிச்சயம் இன்சுலின் செலுத்த வேண்டும்.
  5. சர்க்கரை அளவு 400க்கு கூடுதலாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 5 யூனிட் என்ற அளவில் இன்சுலின் செலுத்த வேண்டும்.
  6. கருப்பு பூஞ்சை நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஸ்டெராய்ட் எடுத்து கொள்பவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதற்கான சிகிச்சையுடன் இன்சுலினை சேர்த்து அளிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

Leave a Comment