கருப்பு பூஞ்சை அறிகுறிகள் என்னென்ன..?? சிகிச்சை முறை என்ன..??
கருப்பு பூஞ்சை தொற்றை கண்டறிவது தொடர்பாகவும், சிகிச்சை முறை குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
அறிகுறிகள்:
அதன்படி
- கருப்பு பூஞ்சைக்கு முகம், கண் கீழ் பகுதியில் வீக்கம்,
- மூக்கடைப்பு,
- எலும்புகளில் புண் உள்ளிட்டவை
அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
(CT – PNS)Scan (or) (MRI) Scan:
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டோருக்கு மூக்கு, கண் பகுதியில் (CT – PNS)Scan சிடி-பிஎன்எஸ் ஸ்கேன், அல்லது முகம் முழுவதும் (MRI) எம்.ஆர்.ஐ. ஸ்கேன்(Scan) எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கருப்பு பூஞ்சை(Block Fungi) தொற்று எந்த கட்டத்தில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மியூகோர்மைகோசிஸ்’(Mucormycosis) :
‘மியூகோர்மைகோசிஸ்’(Mucormycosis) என்னும் கருப்பு பூஞ்சை(Block Fungi) மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா(Corona) பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்று நோயாகவும் அறிவித்துள்ளன.