கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி-காங்கிரஸ் கட்சிக்கு-இழுபறி முடிவுக்கு வந்தது. - Tamil Crowd (Health Care)

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி-காங்கிரஸ் கட்சிக்கு-இழுபறி முடிவுக்கு வந்தது.

 கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி-காங்கிரஸ் கட்சிக்கு-இழுபறி முடிவுக்கு வந்தது.

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் இழுபறி நீடித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் பக்கம் காங்கிரஸ் செல்லுமா என்கிற நிலையில், காங்கிரஸ் – திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. ஸ்டாலின் இல்லத்தில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

54 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க 18 தொகுதிகள் என திமுக நிற்க, பேச்சுவார்த்தை இழுபறியானது. இதனால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 6) மதியம் முதல் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது.

அதில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் காங்கிரஸுக்கே அளிப்பது என உடன்பாடானதாகத் தெரிகிறது. 

மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: ”கூட்டணி உறுதியானது. தலைவர்கள் அனைவரும் பேசினோம். நாளை (மார்ச் 7) காலை 10 மணிக்கு உடன்பாடு கையெழுத்தாகிறது. அப்போதே உங்களுக்கு எத்தனை தொகுதிகள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் மிச்சம் இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிறிய கட்சிகள் மட்டுமே. அதுவும் மார்ச் 8-ம் தேதிக்குள் முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது. இதன் மூலம் திமுக தோழமைக் கட்சிகள் மீண்டும் ஒன்றுபட்டுத் தேர்தலைச் சந்திக்கின்றன. பலம் வாய்ந்த கூட்டணியாக தேர்தல் களத்திற்கு திமுக அணி வருகிறது.

Leave a Comment