கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை இயற்கையாக நீக்குவது எப்படி..?? - Tamil Crowd (Health Care)

கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை இயற்கையாக நீக்குவது எப்படி..??

கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை இயற்கையாக நீக்குவது எப்படி..??

கண் கருவளையத்திற்கு வயது மிகவும் முக்கியமான காரணமாகும். வயது அதிகமானால் தோலில் தொய்வு ஏற்பட்டு கண் கருவளையம் ஏற்படும். அதோடு சரியான தூக்கமின்மை, வேலைச்சுமை உள்ளிட்ட காரணங்களாலும், கண்ணை சுற்றி கருவளையம் ஏற்படும். இதனால் முகம் பொலிவிழந்து காணப்படும். 

இந்த செய்தியையும் படிங்க…

உடல் எடையை குறைக்க, தொப்பை கொழுப்பை குறைக்க-எலுமிச்சை வெல்லம் பானம்..!!

கருவளையத்தை இயற்கையாக எப்படி நீக்குவது ?

  • உருளைக்கிழங்கை அரைத்து அந்த சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
  • தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா சேர்த்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.
  • பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.
  • சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும். வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.
  • ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

  • சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.
  • டீ பேக்கை ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்த பின் அதை வைத்து கண்ணின் கருவளையத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைய தொடங்கும்.

Leave a Comment