ஓட்டு எண்ணிக்கை பணிகள் குறித்து -அதிகாரிகள் ஆலோசனை..!! - Tamil Crowd (Health Care)

ஓட்டு எண்ணிக்கை பணிகள் குறித்து -அதிகாரிகள் ஆலோசனை..!!

 ஓட்டு எண்ணிக்கை பணிகள் குறித்து -அதிகாரிகள் ஆலோசனை..!!

ஓட்டு எண்ணிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்தது.தேர்தல் கமிஷன் சார்பில் பீஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாசா, தேர்தல் கமிஷன் செயலர் மதுசுதன் குப்தா, தேர்தல் கமிஷனின் பார்வையாளர் விப்பின் கட்டாரா ஆகியோர் நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த செய்தியையும் படிங்க…
அப்போது ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்; ஓட்டு எண்ணிக்கையை எவ்வாறு துவக்க வேண்டும்; தபால் ஓட்டுகளை எவ்வாறு எண்ண வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.இக்கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Comment