ஓட்டு எண்ணிக்கைக்கு வந்த அதிகாரிகள்- அதிர்ச்சி..!!
திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, மொத்தம், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பத்து தொகுதிகளிலும், 164 பேர் போட்டியிட்டனர்.
இந்த செய்தியையும் படிங்க…
அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கா-உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!! |
மூன்று இடங்களில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை, 8:00 மணியளவில், தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பின், மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும், தி.மு.க., வேட்பாளர்களே முன்னணி வகித்தனர். இதனால், அ.தி.மு.க., முகவர்களும், வேட்பாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதில், ஒரு சில வேட்பாளர்கள், மதியமே, ஓட்டு எண்ணும் இடத்தை விட்டு, வெளியில் சென்றனர்.ஓட்டு எண்ணும் பணியினை, தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் பொன்னையா, எஸ்.பி., அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி உள்ளிட்டோர், பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
திருத்தணி சட்டசபை தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை, திருவள்ளூர் அடுத்த, பெருமாள்பட்டு தனியார் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யா முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.மொத்தம், 29 சுற்றுகள் எண்ணி, மாலை, 6:00 மணிக்கு முடிக்கப்பட்டது. பின், திடீரென தேர்தல் பார்வையாளர் வெங்கட்ட கவுடா திருத்தணி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்திற்கு நேரில் வந்து, ஓட்டு இயந்திரங்களை சரி பார்த்து ஆய்வு செய்தார்.
சமூக இடைவெளி ‘அம்போ’பெருமாள்பட்டு தனியார் கல்லுாரியில் நடந்த, ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர் மற்றும் முகவர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அனைவரும், சமூக விலகல் கடைப்பிடிக்காமல், கூட்டம் கூட்டமாக நின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
‘சத்தான உணவு சாப்பிட்டால், 80 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்’- உலக சுகாதார நிறுவனம்..!!