ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வு கடுமையாக்கப்படும் - மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தகவல். - Tamil Crowd (Health Care)

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வு கடுமையாக்கப்படும் – மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்.

 ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வு கடுமையாக்கப்படும் – மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தகவல். 

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வு கடுமையாக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார்.

உலகில் வாகனங்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ள இந்தியா, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு 10 சதவீதமாக இருப்பதாக சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. அதேபோல கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என மற்றொரு தரவு சொல்கிறது.

முறையாக தகுதி தேர்வு நடத்தாமல் அந்த கையில் காசை வாங்கி கொண்டு இந்தக் கையில் ஓட்டுநர் உரிமத்தைக் கொடுப்பதே இதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தற்போது இருக்கும் தகுதி தேர்வு முறை இலகுவதாக இருப்பதால் எளிதில் ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்படுகிறது என்ற புகாரும் பரவலாக எழுந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வைக் கடுமையாக்க முடிவு செய்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பி கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த கட்கரி, “ஓட்டுநர் உரிமம் பெற விழைபவர்களுக்கு இனி கடுமையான பரிசோதனைகள் நடைபெறும். வாகனத்தைப் பின்னாலிருந்து (Reverse) இயக்குவது கூட துல்லியமாக இருக்க வேண்டும். அதேபோல ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மதிப்பெண் 69 சதவீதத்தைத் தாண்ட வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் உரிமம் பெற முடியும். வாகனத்தில் ரிவர்ஸ் கியர் இருந்தால் கண்டிப்பாக வாகனத்தைப் பின்னால், வலதுபுறம், இடதுபுறம் திருப்புவது என அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment