ஒரே வாக்காளர் இரு இடங்களில் வாக்களிப்பதை தடுக்க நடவடிக்கை: தமிழக, புதுச்சேரி கலெக்டர்கள் ஆலோசனை
தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்:
தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடந்தது.புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வாகார்க் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர சாகமூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா, விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.