ஒரே நாளில் நிகழ உள்ள வானில் நிகழும் மிக அரிதான- மூன்று வானியல் அதிசயங்கள் என்னென்ன..?? - Tamil Crowd (Health Care)

ஒரே நாளில் நிகழ உள்ள வானில் நிகழும் மிக அரிதான- மூன்று வானியல் அதிசயங்கள் என்னென்ன..??

 ஒரே நாளில் நிகழ உள்ள வானில் நிகழும் மிக அரிதான- மூன்று வானியல் அதிசயங்கள் என்னென்ன..??

மூன்று வானியல் அதிசயங்கள்:

  1.  இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்(Full Lunar Eclipse), 
  2. ப்ளட் மூன்(blood moon), மற்றும் 
  3. சூப்பர் மூன் (Super Moon) ஆகிய 3 வானியல் அதிசயங்களும் ஒரே நாளில் நிகழவுள்ளது.

முழு சந்திர கிரகணம்(Full Lunar Eclipse):

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல், சந்திரனின் மீது விழுவதே சந்திர கிரகணம். நாளை நிகழவுள்ள முழு சந்திர கிரணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்கலாம்.

சூப்பர் மூன்(Super Moon):

பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அருகே நிலவு வரும் போது வழக்கத்தை விட பெரிதாக தெரியும் இதுவே சூப்பர் மூன். 

 ப்ளட் மூன்(Blood Moon):

சந்திர கிரகணத்தின் போது நிலவு, ரத்தச் சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். இந்நிகழ்வை ப்ளட் மூன் என்பார்கள். இவை மூன்றும் இன்று புதன்கிழமை ஒரே நாளில் நிகழவுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

ஆன்லைன் வகுப்புகள்  தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்- ஆசிரியர்களுக்கு  வகுக்கப்படாதது ஏன்..?? 

இந்த ஆண்டின், முதல் சந்திர கிரகணம் இன்று மாலை (புதன்கிழமை) நிகழ்கிறது. கிரகண நேரத்தில் பெரிய நிலா அதாவது, ‘சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்’ எனப்படும், ரத்த நிலா தோன்றும் வானியல் நிகழ்வும் நடக்கிறது.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். இதில் முழு சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளுக்கு 2 முறை நிகழும். முழுமையான சந்திர கிரகணத்தின்போது நிலவு கூடுதல் ஒளியுடன் ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால், அதை ரத்த நிலா என்று அழைக்கின்றனர். அப்படிப்பட்ட முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.

சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் இன்று காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை சந்திரன் உதயமானதும் சிறிது நேரத்துக்கு பகுதியளவு சந்திர கிரகணத்தை, சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள், ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

60 வயது வரை முழு சம்பளம், காப்பீடு, கல்வி – டாடா நிறுவனம் அறிவிப்பு..!!  

சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சந்திர கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும். அதை தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும். இன்று ஏற்படும் சந்திர கிரகணத்துக்குப் பின் இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி காணலாம்.

Leave a Comment