ஒன்றாம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்-கணினி ஆசிரியர்கள் முன்வைத்தனர்.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் தொடக்க வகுப்பிலேயே கணினி பாடங்களை மாணவர்களுக்கு நடத்துகின்றனர். ஆனால் அரசு பள்ளியில் ஒரு மாணவன் 11ஆம் வகுப்பில் தான் கணினி அறிவியல் படிக்க முடிகிறது. இதனால் அம்மாணவன் உயர்கல்வியில் பல இடர்பாடுகளை சந்திக்கின்றான். இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் தமிழக அரசு ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும் என்று கூறியது. ஆனால் அது வெறும் வார்த்தையாக உள்ளதே தவிர செயல்முறையில் இல்லை என்று ஆசிரியர்கள் வேதனை கொள்கின்றனர்.
6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம்; உரிய ஆசிரியர்கள் இன்றி சாத்தியம் ஆகுமா?
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என்ற ஒற்றை வாக்கியம் இடம் பெற்றது.அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ‘ஒன்றாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்பிரிவை அரசு பள்ளிகளில், ஆறாவது பாடமாக தொடங்க வேண்டும்.
கட்டாயப் பாடமாக கணினி பாடத்தை பயிற்று வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து முன்வைத்தனர்.இதன் விளைவுதான், தமிழக அரசின் ஒற்றை வாக்கிய அறிவிப்பாக மலர்ந்தது.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன் கூறியதாவது:
கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 2011ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வந்தது. அதிமுக அரசு அதனை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பையில் போட்டது.
கணினி ஆசிரியர்களுக்கு ‘டெட்’, ‘ஏ.இ.இ.ஓ.,’, ‘டி.இ.ஓ.,’ போன்ற தேர்வுகள் கிடையாது:
கடந்த, 2011ல் அ.தி.மு.க., அரசு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்தியது. ஆசிரியரின்றி கணினிக்கல்வி சாத்தியமா?தற்போது, ஆறு முதல் பத்தாம் வகுப்பிற்கு, ‘டேப்’ மட்டும் வழங்கிவிட்டு, பள்ளியில் உள்ள பிற பாட ஆசிரியர்களை வைத்தே அவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதற்கான பயிற்சி துவங்கிவிட்டது. கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க அதற்கு உரிய துறையில் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்