ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி-சென்னைப் பல்கலைக் கழகம் அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி-சென்னைப் பல்கலைக் கழகம் அறிவிப்பு..!!

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி-சென்னைப் பல்கலைக் கழகம் அறிவிப்பு..!!

இலவசக் கல்வித்திட்டத்தின் கீழ் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னைப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தை சென்னைப் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

BREAKING: யாருக்கெல்லாம் PLUS TWO மறு தேர்வு: அமைச்சர் விளக்கம்..!! 

இதுகுறித்து சென்னைப் பல்கலைகழகம் விடுத்துள்ள அறிக்கையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆதரவற்ற முதல் தலைமுறை மாணவர்கள் இளநிலைப் பட்டப்படிப்புக்ளில் சேருவதற்கு சென்னைப் பல்கலையில் இலவச கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலையில் இணைப்பு பெற்றுள்ள சுயநிதி கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும்கல்லூரிகளில் சேரவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஏழை மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment