எலும்புகள் மற்றும் கர்ப்பபை வலுப்பெற – கருப்பட்டி..!!
- கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும்.
- பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி.
இந்த செய்தியையும் படிங்க…
- கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும்.
- மேலும் கருப்பட்டி கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
- பதநீரை காய்ச்சி அதிலிருந்துபெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவகுணம் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
- சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
- பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்து வந்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
- சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.
- ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
- குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.