எச்சரிக்கை:கொரோனா 3ஆவது அலை: அக்டோபா்-நவம்பரில் உச்சத்தில் இருக்கும்..!!
கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
புதிய 9 மாவட்டங்கள்: உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்கும் திமுக, அதிமுக நிர்வாகிகள்..!!
இந்த குழு தற்போது கொரோனா 3வது அலை பாதிப்பு குறித்து கணித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதில்,
நோய் எதிர்ப்பு திறன்
தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு,
புதிய உருமாறிய கொரோனா வகைகள்
என்பன
உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. 2வது அலை தாக்க முன்கணிப்பின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது, கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3வது அலை பாதிப்பு அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
“இதையெல்லாம் செய்தாலே கொரோனா நம்மை அண்டாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!
இது 2வது அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தின் போது பதிவான தினசரி பாதிப்பு அளவில் பாதிக்கும் குறைவாகும். மே 7ந்தேதியன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 4,14,188 ஆக பதிவானது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.