எங்கு?, எப்போது? பதவியேற்பு விழா -ஸ்டாலின் விளக்கம்..!!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6ஆம் தேதி நடந்தது. அதில் பதிவான வாக்குகள் மே.2 இல் எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது. முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு மாநில தலைவர்கள், தேசிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியையும் படிங்க…
‘சத்தான உணவு சாப்பிட்டால், 80 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்’- உலக சுகாதார நிறுவனம்..!!
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று, சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலினிடம் நிருபர்கள் பதவியேற்பு விழா எப்போது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “செவ்வாயன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். கொரோனா பரவலால் ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடம்பரம் இல்லாமல் பதவியேற்பு விழா நடைபெறும்” என தெரிவித்தார்.