ஊரடங்கு நீட்டிப்பா..?? நாளை ஆலோசனை கூட்டம்-முதலமைச்சர் ..!!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க….
தமிழக பள்ளிக்கல்வி துறையில் நடந்துள்ள விதிமீறல்கள் -விசாரணை நடத்த உத்தரவு..!!
நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
இக்கூட்டத்தில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைப்பதென தீர்மானிக்கப்பட்டு 13 கட்சிகளை சேர்ந்த குழு உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.
24-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் உறுப்பினர்கள் ஆலோசனை:
இந்நிலையில் இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை காலை (11:30 மணிக்கு) நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் வரும் 24-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க….
கல்வித்துறையில் ஊழல்- தடுக்கும் புதிய சீர்திருத்த முறைக்கு வரவேற்பு..!!
இந்த கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் குழுவுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்திடவுள்ளார். இந்த கூட்டங்களில் பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் அரசு முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.