ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி..!!- மு.க.ஸ்டாலின். - Tamil Crowd (Health Care)

ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி..!!- மு.க.ஸ்டாலின்.

 ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி..!!- மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்றுக் குறைந்து வரும் 27 மாவட்டங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க… 

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட- தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு..!!

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொற்றுக் குறைந்து வரும் 27 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும். 

  1. அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlor, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  2. பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும். 
  3. வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  4. கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  5. மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  6.  மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  7.  டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  8. செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  9.  கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 
  10. மிக்ஸி, கிரைண்டர், டி.வி. பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  11.  பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
  12. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 
  13. தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். 
  14. தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் TN eRegistration மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்.
  15. தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
  16.  வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

corona தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் Full Lockdown பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டு. மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி Corona தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment