ஊரடங்கில்எவற்றுக்கெல்லாம் e-Pass பெற்று பயணிக்க அனுமதி..??
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது வரும் 7 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சில நடவடிக்கைகளுக்கு மீண்டும் e-Pass முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் e-Pass – ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு (Lockdown) நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது வரும் 7 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சில நடவடிக்கைகளுக்கு மீண்டும் e-Pass முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு Lockdown நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் காலை 5 மணி முதல் மாலை மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி,
- கொடைக்கானல்,
- ஏற்காடு,
- ஏலகிரி,
- குற்றாலம்
பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து e-Pass பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கோவை,
- திருப்பூர்,
- சேலம்,
- கரூர்,
- ஈரோடு,
- நாமக்கல் ,
- திருச்சி
- மதுரை
மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்பவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களை வாங்குமாறும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.