உஷார்..!! இந்த 9 தமிழக மாவட்டங்களில் முழு ஊரடங்கு..!! - Tamil Crowd (Health Care)

உஷார்..!! இந்த 9 தமிழக மாவட்டங்களில் முழு ஊரடங்கு..!!

 உஷார்..!! இந்த 9 தமிழக மாவட்டங்களில் முழு ஊரடங்கு..!!

இந்தியாவில் கொரோனா 2வது அலை தற்போது நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

’18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட முன்வர வேண்டும்-தமிழக ஆளுநர் வேண்டுகோள்..!! 

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 13,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, தூத்துக்குடி போன்ற முக்கிய மாவட்டங்களில் கொரோனாவின் தீவிரம் அதிகளவு காணப்படுவதால் இந்த 9 மாவட்டங்களில் மட்டும் 2 முதல் 4 வாரம் வரை முழு ஊரடங்கை அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த 9 மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்துக்கு தடை மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்கு நேர கட்டுப்பாடுடன் ஊரடங்கை அமல்படுத்தலாம் என தெரியவருகிறது. மேலும், மத்திய அரசு உள்ளூர் சூழ்நிலைக்கேற்ப மாநில அரசுகளே கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் என அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment