உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு -மாநில தேர்தல் ஆணையம்..!! - Tamil Crowd (Health Care)

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு -மாநில தேர்தல் ஆணையம்..!!

 உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு -மாநில தேர்தல் ஆணையம்..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாநில தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.

9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்:

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை மாநில தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கை கடைபிடிக்கும் வகையில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை மணி வரை இருந்த நிலையில், நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Comment