உலகின் முதல் கொரோனா தடுப்பூசி: ‘ஸ்ப்ரே’ வடிவ தடுப்பூசி -நாசி வழியாக செலுத்தப்படும்..!! - Tamil Crowd (Health Care)

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி: ‘ஸ்ப்ரே’ வடிவ தடுப்பூசி -நாசி வழியாக செலுத்தப்படும்..!!

 உலகின் முதல் கொரோனா தடுப்பூசி:  ‘ஸ்ப்ரே’ வடிவ தடுப்பூசி

 -நாசி வழியாக செலுத்தப்படும்..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மாஸ்கோவில் உள்ள கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.

“நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசி”:

ரஷியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக்-வி  தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. நம் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கடந்த ஆண்டு அக்டோபரில், நாசி வ்ழியாக பயன்படுத்தும் ‘ஸ்ப்ரே’ வடிவ தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கான அங்கீகாரத்தை ரஷிய சுகாதார அமைச்சகம் கமலேயா மையத்திற்கு வழங்கியது.

கடந்த ஜனவரி மாதத்தில், கமலேயா மையத்தின் இயக்குனர், அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் பேசும்போது, “நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசி மூன்று முதல் நான்கு மாதங்களில் கிடைக்கும்” என்றார். அதன்படி இப்போது இந்த தடுப்பூசி, பொதுமக்கள் பயன்படுத்த பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நோயெதிர்ப்பாற்றலை வழங்கும்:

இதன்மூலம், நாசி வழியாக செலுத்தப்படும் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக இது தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த தடுப்பூசி ஒமைக்ரானை எதிர்த்து திறம்பட நோயெதிர்ப்பாற்றலை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும். 

Leave a Comment