உருமாறிய புதிய வகை CORONA : 29 நாடுகளில் கண்டுபிடிப்பு..!!
உலக சுகாதார அமைப்பு(WHO) :லாம்ப்டா (LAMBDA)என்ற உருமாறிய CORONA வகை 29 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் அமெரிக்கா இந்த வைரஸ் உருவாகியுள்ளதாக தெரிகிறது. பெருவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட, LAMBDA அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு(WHO) கூறியுள்ளது. பெருவில் LAMBDA பரவலாக உள்ளது, அங்கு APRIL 2021 முதல் CORONA நோயாளிகள் 81 சதவீதம் இந்த மாறுபாட்டுடன் உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த செய்தியும் படிங்க…
வீட்டை விட்டு வெளியே செல்வோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!!
சிலி நாட்டில் கடந்த 60 நாட்களில் CORONA பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் இதற்கான அறிகுறி 32 சதவிகிதத்தில் இருப்பது கண்டறியப்பட்டது, பிரேசில் , அர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் போன்ற பிற நாடுகளிலும் CORONA பரவலின் புதிய மாறுபாட்டு அதிகரிக்க தொடங்கியுள்ளன. இருப்பினும் இதற்கான சாத்தியக்கூறுகள் சற்று குறைவாக உள்ளது ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது. இதுகுறித்து கூறியுள்ள ஜெனீவா அமைப்பு ஒன்று, LAMBDA மாறுபாட்டை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளது.
இதனிடையே எளிதில் பரவக்கூடிய DELTA வகை வைரசானது உருமாறி ‘DELTA PLUS’ அல்லது ‘ஏ.ஒய் 1 -AY1’ வகையை உருவாக்குவதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.