இ-பதிவு(TN eRegisration) குறித்த சந்தேகங்களுக்கு கட்டணமில்லா எண் அறிவிப்பு..!!
ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகள் காரணமாக வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக இ-பதிவு (TN eRegisration) செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கென பிரத்யேக இணையதளம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது என்பதும், இ-பதிவு(TN eRegisration) இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
கொரோனா வந்தவர்களுக்கு -அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன..??
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் இனி இ-பதிவு (TN eRegisration) குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்க கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. 1100 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் டயல் செய்து இ-பதிவு (TN eRegisration) குறித்த தங்களுடைய சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
திருமண விழா – (TN eRegistration) :தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது..!!
இ-பதிவு (TN eRegisration) செய்யும் பொது மக்கள் யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.