இலங்கையில் புதிய கொரோனா; காற்றில் ஒரு மணிநேரம் இருக்குமாம்..!!
இலங்கையில் அதிக சக்திவாய்ந்த புதிய கொரோனா பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் ஒரு மணிநேரம் இருக்கக் கூடியது எனவும் இலங்கையில் 3வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்..?? என்னென்ன இயங்காது..??
இந்நிலையில் இலங்கையில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாலவிகே கூறுகையில், ‘இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளை விட புதிய கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காற்றில் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு நீடித்து இருக்கக்கூடியது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழக அரசின் -மீன்வளத்துறையில் அரசு வேலைவாய்ப்பு. .!!|
இலங்கையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. இதற்கு அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் திரிபு இலங்கையில் 3-வது அலையை உருவாக்கக்கூடும்,’ எனக் கூறினார்.