இனி வரும் நாட்களில் சிலிண்டர் டெலிவரிக்கு - தாமதம் ஏற்படும்..!! - Tamil Crowd (Health Care)

இனி வரும் நாட்களில் சிலிண்டர் டெலிவரிக்கு – தாமதம் ஏற்படும்..!!

இனி வரும் நாட்களில் சிலிண்டர் டெலிவரிக்கு – தாமதம் ஏற்படும்..!! 

சிலிண்டர் இணைப்பு:

அத்தியாவசியப் பட்டியலில் சமையல் சிலிண்டர் இன்றியமையாததாகிவிட்டது. அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்டர்கள் அதிகமாக வருவதால் டெலிவரி பணியாளர்கள் துரிதமாக பணியாற்றி வருகின்றனர். சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் இருப்பவர்கள் கொரோனா அச்சத்தையும் தாண்டி விநியோகப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த செய்தியையும் படிங்க…

ஆரோக்கியமான இதயத்திற்கு- சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் :கொரோனா தொற்றால் பாதிப்பு:

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிலிண்டர் டெலிவரி பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. சிலிண்டர் விநியோகப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெலிவரிக்கு தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 50,000 சிலிண்டர் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமையல் எரிவாயு விநியோகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சிலிண்டர் டெலிவரி கிடைப்பதில்-தாமதம்:

தற்போது சிலிண்டர் விநியோகப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களில் சுமார் 20 சதவீதப் பேருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 2ஆவது அலையில் பாதிப்பு அதிகரித்திருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் நாட்களில் சிலிண்டர் டெலிவரி கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் வரையில் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

இரத்த வெள்ளையணுக்களை(WBC) அதிகரிக்க- எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் .!!

சமையல் எரிவாயு விநியோகக் கூட்டமைப்பு சார்பாகக் கோரிக்கை: 

ஆகையால், சிலிண்டர் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று சமையல் எரிவாயு விநியோகக் கூட்டமைப்பு சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment