இனி தங்கம் வாங்க புது கட்டுப்பாடு- மத்திய அரசு அதிரடி..!!
நீண்ட நாட்களாக நாம் வாங்கும் தங்க நகைகள், ஒரிஜினல் தங்கம் தானா?
எத்தனை சதவிகிதம் செம்பு கலக்கப்படுகிறது என்கிற தெளிவு இல்லாமலேயே விளம்பர மோகத்தில் கடை கடையாக ஏறி ஏமாந்து வந்தனர் பொதுமக்கள். இனி, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா பாசிட்டிவ்- வந்தால் செய்யவேண்டியது என்ன?
எனவே, ஜூன் 1ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் தங்கத்தினால் செய்யப்படும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகா்வோர் விவகார செயலா் லீனா நந்தன், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி தற்போது கோரிக்கைகள் எதுவும் எழவில்லை. கட்டாய ஹால்மார்க் கொண்டு வருவதன் மூலம், குறைந்த தரத்திலான தங்க விற்பனையை நிறுத்துவதோடு, நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க முடியும் என்றார்.
அதே சமயம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வந்தாலும், விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 34 ஆயிரத்து 800-க்கு விற்றது. கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 4 ஆயிரத்து 350 ஆக உள்ளது.