இந்த மாநிலத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு
குஜராத்தில் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சிங் புதன்கிழமை அறிவித்தார். கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநிலக் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பூபேந்திர சிங் புதன்கிழமை அறிவித்தார். கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனவரி 11ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.