இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்: உதவிக்கரம் நீட்டிய பிரஞ்சு அதிபர்..!! - Tamil Crowd (Health Care)

இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்: உதவிக்கரம் நீட்டிய பிரஞ்சு அதிபர்..!!

 இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம்: உதவிக்கரம் நீட்டிய பிரஞ்சு அதிபர்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல இடங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் இருப்பது பீதியைக் கிளப்புகிறது. இதற்கிடையில், கோரோனா தொற்று திடீரென அதிகரிப்பதை சமாளிக்க, இந்தியாவுக்கு உதவ பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் முன்வந்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் பிரான்ஸ் இந்தியாவுடன் இருக்கிறது: இமானுவேல்:

இம்மானுவேல் மாக்ரோன் கூறுகையில், ‘இந்தியாவில் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் இந்தியர்களுடன் உள்ளது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த போராட்டத்தில் பிரான்ஸ் உங்களுடன் உள்ளது. இந்த தொற்றுநோய் உலகில் யாரையும் விடவில்லை. உங்களுக்கு ஆதரவாக இருக்க நாங்கள் தயாராக உள்ளோம்.” என்றார்.

இந்த செய்தியையும் படிங்க….

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது?: மருத்துவர்கள் விளக்கம்..!!

இந்தியாவில் இருந்து பிரான்சுக்குச் செல்வோர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு (Coronavirus) மத்தியில், இந்தியாவில் இருந்து வரும் மக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் கனடா ஆகியவை இந்தியாவை சிவப்பு பட்டியலில் வைத்து, இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

Leave a Comment