“இந்தியாவின் உருமாறிய கொரோனா- 17 நாடுகளுக்கு பரவி உள்ளது”: உலக சுகாதார நிறுவனம்..!!
இந்தியாவில் தென்படும் உருமாறிய கொரோனா சுமார் பதினேழு நாடுகளுக்கு மேல் பரவி உள்ளதாக உலக பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. B.1.617 எனப்படும் இந்த உருமாறிய கொரோனா இந்தியாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாது – மத்திய அரசு..!!
இந்த உருமாறிய கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாட்டுக்கு நாடு இந்த உருமாறிய கொரோனா தொற்றின் வகைப்பாடு மாற்றத்துடன் காணப்படுவதாகவும் WHO தெரிவித்துள்ளது.
மேலும் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையின் பரவல் தீவிரமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரிட்டன், சிங்கப்பூர், அமெரிக்கா மாதிரியான நாடுகளில் இந்த உருமாறிய கொரோனா பரவி உள்ளது.