இணைய வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம். - Tamil Crowd (Health Care)

இணைய வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம்.

இணைய வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம்.

 எதிர்கால தொழில்நுட்பத்தில் இணைய வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்க்டாப் பயன்பாட்டில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதியை வாட்ஸ் அப் சமீபத்தில் புதுப்பித்தது. இதன் மூலம் டெஸ்க்டாப் கொண்டு பயனர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும்.

அதே நேரத்தில் டெஸ்க் டாப் பயன்பாட்டில் உங்கள் சாதனம் மைக்ரோ ஃபோன், வெப்கேம் ஆகியவற்றை சப்போர்ட் செய்ய வேண்டும். அதன்பிறகு டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் மூலம் குரல் அல்லது வீடியோ அழைப்பில் பேசலாம்.

ஆனாலும் டெஸ்க்டாப்பில் குரூப் கால் செய்ய முடியாது. ஒரு நேரத்தில் ஒரு பயனரை மட்டுமே அழைக்க முடியும். இந்நிலையில் இனிவரும் நாட்களில் இண்டர்நெட் வசதி இல்லாமலேயே வீடியோ மற்றும் குரல் அழைப்புகள் செய்ய முடியும்.

வாட்ஸ் அப் தொடர்பான தகவல்களை வழங்கும் WABetalInfo இந்த தகவலை தெரிவித்துள்ளது. உங்கள் தொலைப்பேசி இணையத்துடன் இணைக்கப்படாமல் இருந்தாலும் டெக்ஸ் டாப்பில் எந்த பிரச்னையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தொழில்நுட்பத்தில் பல சாதனங்களின் ஆதரவுக்கு பிறகு இணைய வசதி இல்லாவிட்டாலும் டெஸ்க் டாப் மூலம் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment