ஆ.ராசாவின் மனைவி -காலமானார்.!
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி சற்றுமுன் காலமானார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காக்கும்-‘ வெற்றிலை,கிராம்பு’..!!
கொரோனா தொற்று நெருக்கடியிலும் கூட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்த ராசாவின் மனைவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மருத்துவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார். மேலும் விரைவில் குணமாகி விடுவார் நம்பிக்கையாக இருங்கள் என அவர் ராசாவுக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.