ஆதார் கார்டில்(Aadhaar Card) ஃபோட்டோ மாற்றுவது எப்படி..?? - Tamil Crowd (Health Care)

ஆதார் கார்டில்(Aadhaar Card) ஃபோட்டோ மாற்றுவது எப்படி..??

 ஆதார் கார்டில்(Aadhaar Card) ஃபோட்டோ மாற்றுவது எப்படி..?? 

இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது அவசியமாகி விட்டது. பெரும்பாலானவர்களுக்கு அதில் உள்ள புகைப்படம் தெளிவு இல்லாமல் இருக்கும். அதனை மிக எளிதாக மாற்றி விட முடியும்.ஆதாரில் பெயர், முகவரி போன்ற திருத்தங்களை ஆன்லைன் மூலமாகவே செய்யலாம்.

ஆனால், புகைப்படத்தை மாற்றுவதற்கு ஆதார் சேவை மையத்துக்கு நேரில் தான் செல்ல வேண்டும்.

  • ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் சென்று என்ரோல்மெண்ட்(Enrollment No.) படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
  • அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்தில் வழங்க வேண்டும்.
  • கைரேகை போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 
  • அங்கேயே புகைப்படம் எடுக்கப்பட்டு அப்டேட் செய்யப்படும்.
  • இதற்கான GST மற்றும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
  •  ஆதாரில் போட்டோ அப்டேட் செய்ததற்கான எண்ணும், அதற்கான ரசீதும் உங்களுக்கு வழங்கப்படும். 
  • அந்த நம்பரை வைத்து அப்டேட் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 
  • போட்டோ அப்டேட் ஆனவுடன் புதிய ஆதார் கார்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Leave a Comment