ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை முடிக்க ஐகோர்ட் உத்தரவு.
ஆசிரியர்களின் பொது மாறுதல் களை விரைவில் முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது அதன்படி ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் கலந்தாய்வை முடித்துக்கொள்ள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஆணை:
தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஆணையிட்டுள்ளார். தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.