ஆசிரியர்கள் உத்தரவை மீறினால்- துறை ரீதியாக நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!!
தமிழகத்தில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த CORONA தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் 30 ஆயிரத்திற்கு மேலாக உறுதி செய்யப்பட்டு வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. தமிழக அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் CORONA பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தாக்குதலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
வீடுகளுக்கான துல்லியமான மின்கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி?… மின்வாரியத்துறை விளக்கம்..!!
ஆனால் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடி வகுப்புகள் நடத்துவதால், பெரும்பாலான பணிகள் அவர்களுக்கு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், CORONA-விற்கு எதிரான தடுப்பு பணிகளில் பல்வேறு தரப்பினரும் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு, CORONA பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறையினரை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவர்கள் அனைவரும், CORONA கட்டுப்பாட்டு மையங்கள், CORONA நோயாளிகளின் தகவல் தொகுப்பு சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்ய மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த செய்தியையும் படிங்க…
10-06-2021- சனி ஜெயந்தி : சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள், தோஷங்கள் தீர இதை செய்யுங்கள்..!!
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், CORONA பணிக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தினால் ஆசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாத நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பினால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.