ஆக்சிஜன் தேவைக்கு அவசர எண் 104..! தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போன்றவற்றில் ஆக்சிஜன் தேவை இருக்கும் பட்சத்தில் 104 அலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம்.
இந்த செய்தியையும் படிங்க….
மே இறுதியில் கொரோனா வியக்கத்தக்க வகையில் குறையும்: ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு..!!
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனையிலும் ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய 24 மணிநேரமும் இயங்கும் கால் சென்டர் அமைக்கப்ட்டுள்ளதாகவும், ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மருத்துவமனையை விரைந்து சென்றடைய தேவைப்படும் பட்சத்தில் காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தேவை அதிகரிக்கலாம் என்ற காரணத்தால் தமிழக அரசு 104 என்ற எண் மூலமாக தொடர்பு கொண்டு ஆக்சிஜன் பெற கால் சென்டர் அமைத்துள்ளதாகவும் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.