‘அரியர்’ தேர்வு உண்டா? தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்!
தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் முழுமையாக நடக்கவில்லை. நடப்பு கல்வியாண்டில், கல்லுாரி மாணவர்களுக்கு, ஒரு மாதம் மட்டுமே வகுப்புகள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டும், கொரோனா தீவிர பரவல் காரணமாக, பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த வரிசையில், கல்லுாரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களை தவிர, மற்ற அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும்.
இந்த உத்தரவால், 30 ஆண்டுகளுக்கு மேலாக, ‘அரியர்’ வைத்திருந்தவர்களும், தேர்வே எழுதாமல், தேர்ச்சி பெற்றனர். இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களை, ‘ஆல் பாஸ்’ செய்தது, ஏற்க முடியாது என்றும் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘அரியர் மாணவர் களுக்கு ஏதாவது ஒரு தேர்வு வைக்க வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க…
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு -நீதிமன்றம் உத்தரவு .
ஆல் பாஸ் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என, தீர்ப்புஅளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய நிலையில், அரியர் தேர்வை நடத்தும் முடிவை, மே, 3 வரை தள்ளி வைக்க, உயர் கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
வரும், 15ம் தேதி, மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும் போது, தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டலாம் என, யோசிக்கப்பட்டுள்ளது.மேலும், புதிய அரசு அமைந்த பின், அதிகாரிகளின் ஆலோசனையை பெற்று முடிவெடுக்கலாம் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.