அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குனர் அதிரடி உத்தரவு..!! - Tamil Crowd (Health Care)

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குனர் அதிரடி உத்தரவு..!!

 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு மாநில திட்ட


 இயக்குனர் அதிரடி உத்தரவு..!!

‘புத்தகமில்லா தினம்’:No bag Day

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ‘புத்தகமில்லா தினம்’ கொண்டாட வழிகாட்டுதல் மற்றும் நிதி விடுவித்து -மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

இவ்விழாவின் நோக்கம்:

மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதும் ஆகும். மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை முழு சுதந்திரத்துடன் வெளிப்படுத்தவும் மனஅழுத்தமில்லாத சூழ்நிலையில் அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்வதற்கும் உடல், மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும்.

பயன்பெறுவோர்:

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்கள்.

அவசியம்:

பாரம்பரிய கலைகளை பற்றிய அறிவினை மாணவர்களிடையே புகுத்துவதன் மூலம் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை இன்னும் பல நூற்றாண்டு பாதுகாக்க முடியும். மேலும், விவசாயம் சார்ந்த அறிவுடன் மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும், மாடித் தோட்டங்களின் தேவைகளையும் மாணவர்கள் அறிய செய்தல்.

பணிகள்:

மாவட்ட அலுவலர்களின் பணிகள்
தலைமையாசிரியரின் பணிகள்


முழு விவரம்- Click Here

Leave a Comment