அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்(PG Assistants) -2,207 காலி பணியிடங்கள் அறிவிப்பு – TRB..!!
அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகள் (TRB) நடைபெறும் தேதி விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தொடர்பான விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2,207 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, போட்டித்தேர்வுகள் நவம்பர் மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, இம்மாதம் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. trb.tn.nic.in என்கிற இணையதள முகவரியில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.