அரசு பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் திரட்டும் பணி தீவிரம்-கல்வித்துறை நடவடிக்கை - Tamil Crowd (Health Care)

அரசு பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் திரட்டும் பணி தீவிரம்-கல்வித்துறை நடவடிக்கை

அரசு பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் திரட்டும் பணி தீவிரம்-கல்வித்துறை நடவடிக்கை.

அரசு பள்ளிகளில்(Government school) இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் திரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த, 2012 முதல் நடைமுறையில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 2012 முதல் நடப்பு கல்வியாண்டு வரை, (2020-21) ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பள்ளிப்படிப்பை தொடராத, இடையில் நின்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை திரட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வருடவாரியாக, ‘டிராப்அவுட்’ ஆன மாணவர்களின் பட்டியலை, மார்ச் 19க்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment