அரசு ஊழியர்களுக்கு – அகவிலைப்படி(DA) சம்பள உயர்வு ..!!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நிலவிய பொருளாதார நெருக்கடியால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தாக்கம் குறைந்து அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு கடந்த 2021 ஜூலை மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31%அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 2022 முதல் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. இந்த நேரத்தில் நிலவி வரும் பண வீக்கத்தின் காரணமாக ஊழியர்கள் அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து நேற்று அகவிலைப்படி 3% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் தற்போது அகவிலைப்படி 34% ஆக அதிகரித்துள்ளது.
இந்த அகவிலைப்படி 2022 ஜனவரி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகும் என்றும் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள் என்றும் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள 34% அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ரூ. 540 உயர்ந்துள்ளது.