அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம்-அரசு புதிய உத்தரவு !!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எனினும் பரவலை கட்டுப்படுத்த முடியாததால் புதிய கட்டுப்பாடுகளையும் அவ்வப்போது விதித்து வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க….
8TH PASS- தமிழக அரசில் 3557 காலியிடங்கள் அறிவிப்பு..!!
அதே நேரம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் தொடர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படாது – மத்திய அரசு..!!
அதாவது ஆசிரியர்கள் மே 1ஆம் தேதி முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும், மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக பயிற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.