‘அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே -முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்’..!!
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள, தொழில்துறை மற்றும் அரசாங்கத்துக்கு இடையே, முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க..
கொரோனா தடுப்பூசியை வீண் செய்ததில் தமிழகம் முதலிடம்- ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!
வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகர்களுக்கான சேம்பர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சீதாராமன், தொற்று நோய்களின் இரண்டாவது அலையை மீறி, பொருளாதார மறுமலர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
அரசாங்கத்திற்கும் தொழில்துறையினருக்கும் இடையே, முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.அது மேலும் பரஸ்பரம் வளர்ச்சியை தக்கவைப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் வளர்ச்சிப் போக்கில் இடையூறுகள் இருக்கக் கூடாது.அப்படி இருப்பின், அது அவநம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும். இவ்வாறு கூறினார்.மேலும், மேற்கு வங்கத்தை பற்றி பேசிய அமைச்சர், ‘மாநிலத்தில் உள்ள தொழில்கள் செழிக்க, ‘ஆக்ஸிஜன்’ தேவைப்படுகிறது. மேலும் உலகமயமாக்கப்பட்ட அணுகுமுறையும் தேவைப்படுகிறது’ என தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் பேசும்போது, ”மாநிலத்தில் உள்ள தொழில்கள் வளர இன்னும் நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்தியாவின் வரலாறு வங்காளத்திலிருந்து எழுதப்பட்டது. ஆனால், டார்ஜிலிங் தேநீர் போன்ற தயாரிப்புகள் கூட இப்போது நலிந்து வருகின்றன.கோல்கட்டாவின் தொழில்கள், கடந்த காலங்களில் பிரகாசித்தது. மீண்டும் அவற்றை பிரகாசிக்க செய்ய வேண்டும். வங்காளமும் அதன் பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.