அரசின் அடுத்த அதிரடி :இந்தியாவுக்கு தனி கிரிப்டோ கரன்சி.!
இந்தியாவில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டை எப்படி ஒழுங்குபடுத்துவது என்ற அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த செய்தியையும் படிங்க…
கிரிப்டோகரன்சிகள் பற்றிய இந்தியாவின் நகர்வு, உலகம் முழுவதும் உற்று நோக்கப்படுகிறது. அடுத்த மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதா அமல்படுத்தப்படுமா என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
எப்படியோ, கிரிப்டோகரன்சிகளை முற்றிலுமாகத் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் கிரிப்டோகரன்சிகளுக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பத்தின் கடிவாளத்தைக் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் அரசுக்கு இருக்கிறது.
கிரிப்டோகரன்சி என்பது என்ன?
கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் பணம். ரூபாய்த் தாள்களைப் போலவோ, உலோக நாணயங்களைப் போலவோ அவற்றை நமது பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள முடியாது. அது இருப்பது இன்டெர்நெட்டில். வர்த்தகம் செய்வதும் இன்டர்நெட்டில்தான்.
எந்த நாட்டு அரசாலோ, ஒழுங்குமுறை அமைப்பாலோ கிரிப்டோகரன்சிகள் வெளியிடப்படவில்லை.
ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் பற்றிய தனது அச்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டிலும் வெளியிட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சிகளையும் அதைப் பயன்படுத்தும் அமைப்புகளையும் தடை செய்தது.
ஆனால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் “இது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் சட்டத்தை உருவாக்கவும்” உத்தரவிட்டது.
கடந்த மாதத்தில் புதிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்தியாவுக்கென தனியாக கிரிப்டோகரன்சியை வெளியிடலாமா? என்பது குறித்தும், அது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாகக் கூறியது. அரசின் முடிவில் இது முக்கியமானது. இந்திய நாணய முறையின் எதிர்காலம் பற்றியது.
இந்தியாவில் எவ்வளவு கிரிப்டோகரன்சிகள் வாங்கப்பட்டிருக்கின்றன என தரவுகள் இல்லாவிட்டாலும், பல லட்சக் கணக்கானோர் டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருக்கிறது.
புதிய ஒழுங்குமுறை அமலுக்கு வரும்பட்சத்தில், ஏற்கெனவே கிரிப்டோ கரன்சிகளை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்றுத் தீர்ப்பதற்கான போதிய காலம் வழங்கப்படும் என்பதையும் அரசு தெளிவுபடுத்திவிட்டது.
இந்தியாவுக்கென தனி கிரிப்டோகரன்சி வந்தால் என்னவாகும்?
சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு இந்தியாவுக்கென தனியாக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக ரிசர்வ் வங்கியும் மத்திய நிதியமைச்சகமும் கடந்த மாதம் கூறின.
டிஜிட்டல் பணத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டுமானால் வர்த்தகத்திலும் பரிமாற்றங்களிலும் அதற்கென சட்டப்பூர்வ மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டிஜிட்டல் பணத்தின் சட்டபூர்வ மதிப்பு சாதாரண மக்களுக்கும் கிடைக்குமா அல்லது மொத்த விற்பனைகளில் மட்டும் பயன்படுத்தப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களுக்கு விடையளிக்க வேண்டியிருக்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா..!!
“தனிநபர் கணக்குகளை வங்கிகள் நிர்வகிப்பது போல, டிஜிட்டல் பணக் கணக்குகளை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கப் போகிறதா? அப்படிச் செய்ய வேண்டுமானால் அதற்கு மிக விரிவான தொழில்நுட்பம் தேவைப்படும். வரி, பண மோசடி, பரிவர்த்தனை முறைகள், தனிநபர் விவரங்களின் பாதுகாப்பு ஏராளமான அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.” .
கொரோனா பெருந்தொற்றுச் சூழலே இந்திய அரசு டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கித் திரும்பியதற்குக் காரணம் .குக்கிராமங்கள் வரை இன்டர்நெட் சென்றிருப்பதால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டில் மட்டும் 42 சதவிகிதம் வரை அதிகரித்திருக்கின்றன .
இப்போதிருக்கும் கிரிப்டோகரன்சிகளை ஆதரிக்காதது ஏன்?
“இப்போது பிரபலமாக இருக்கும் பிட்காயின் மற்றும் ஈதர் போன்றவை அனைவருக்கும் பொதுவானவை. எந்த நாட்டு அரசுடனும் இணைப்புக் கிடையாது. இண்டர்நெட் இருந்தால் கிரிப்டோகரன்சிகளை யாரும் பெற முடியும். பொருளாதாரம் மற்றும் நிதிசார்ந்த அரசின் கொள்கைகளுடன் கிரிப்டோகரன்சிகள் இருக்க வேண்டும் என்பதால்தான் அரசு அதன் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க நினைக்கிறது. அதற்காக ஏற்கெனவே இருக்கும் கிரிப்டோகரன்சிகளும் அரசின் கிரிப்டோகரன்சியும் மோத வேண்டிய அவசியம் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கலாம்.”
“கிரிப்டோ கரன்சி பரிமாற்ற அமைப்புகள் வாடிக்கையாளர்களின் அடையாள ஆவணங்களைப் பெற்று, வங்கிக் கணக்குகள் மூலமாக மட்டுமே பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும். இந்த நடைமுறையில் மோசடியாளர்கள் யாரும் ஆதாயம் பெறாமல் தடுக்க முடியும்” .