அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்-ஸ்டெர்லைட்: ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் அனுமதி..!!
`தமிழ்கத்திலும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து காணப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. அதனை மூடியதே தமிழக அரசு தான்” – எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை முன் எப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பாதிப்பு அதிகளவில் இருப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.
தமிழகத்திலும் வரும் நாள்களில் ஆக்ஸிஜனின் தேவை அதிகரிக்கும். இந்நிலையில் வேதாந்தா நிறுவனம், மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாமா என தமிழக அரசிடம் பதில் கேட்டிருந்தது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
தமிழகத்தில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில் தமிழக முதல்வர் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றார்கள். முதல்வர் இன்று அவசர ஆலோசனை நடத்த இருக்கும் சூழலில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், பா.ஜ.க, பாமக, தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், `தேவையை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும், தமிழக அரசின் உச்சகட்ட கண்காணிப்பில் அனுமதி அளிக்கலாம்’ என கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர அங்கு வேறு எந்த பணிகளும் நடக்க கூடாது எனவும் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி
“தமிழ்கத்திலும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து காணப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. அதனை மூடியதே தமிழக அரசு தான். தற்போது நிலவும் ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம். ஆக்ஸிஜன் உற்பத்தி உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் இணைந்து கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த வைகோ, அரசின் கட்டுப்பாட்டில் ஆலையை எடுத்து, ஆக்ஸிஜன் தயாரிக்க அதிர்ப்பு தெரிவிக்க மட்டோம். அரசின் கட்டுப்பாட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டு ஸ்டெர்ட் ஆலையை இயக்க அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் ‘ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழக தேவை போக மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றம்.