அதிமுக வாக்கு வங்கியில் சேதம் ஏற்படுத்தாத அமமுக, தேமுதிக – என்ன காரணம்..??
இயல்பாகவே தென் மாவட்டங்களில் சமூக ரீதியான வாக்குகளின் ஆதரவால் அ.ம.மு.க-வுக்கு அதிக செல்வாக்கு உண்டு. இந்தநிலையில், அ.ம.மு.க – தே.மு.தி.க கூட்டணி, தென்மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த செய்தியையும் படிங்க……
ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!!
2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கு பயத்தை ஏற்படுத்திவந்த அ.ம.மு.க. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அமைதி காத்து வருவது, யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்!
தமிழக அரசியல் களத்தில், அ.தி.மு.க – அ.ம.மு.க இடையிலான முட்டல் மோதல்கள் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திவந்தன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.ம.மு.க சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர்கள், அ.தி.மு.க-வின் வெற்றியை கணிசமான அளவில் சேதப்படுத்தியதால், தி.மு.க ஒட்டுமொத்தமாக 38 இடங்களைக் கைப்பற்றியது.
இந்தச் சூழ்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.ம.மு.க கூட்டணி அ.தி.மு.க கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தது. கூடுதல் அம்சமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அ.தி.மு.க-வுடன் கோபித்துக்கொண்டு கூட்டணியை விட்டு வெளியேறிய தே.மு.தி.க., யாரும் எதிர்பாராத வகையில், அ.ம.மு.க-வுடன் கைகோத்துக் களம் இறங்கியது.
ஏற்கெனவே ‘கிலி’யில் இருந்துவந்த அ.தி.மு.க-வினருக்கு இது கூடுதல் பயத்தைக் கொடுத்தது. தேர்தல் பிரசாரத்திலும் அ.தி.மு.க-வுக்கு எதிராகக் களமாடுவதில் அ.ம.மு.க-வினரைவிடவும் கூடுதல் ஆர்வத்தோடு செயல்பட்டு வந்தனர் தே.மு.தி.க தொண்டர்கள். இயல்பாகவே தென் மாவட்டங்களில் சமூக ரீதியான வாக்குகளின் ஆதரவால் அ.ம.மு.க-வுக்கு அதிக செல்வாக்கு உண்டு. இந்தநிலையில், அ.ம.மு.க – தே.மு.தி.க கூட்டணி, தென்மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி வந்தது.
ஆனால், தற்போதைய வாக்கு எண்ணிக்கை, இந்தக் கணிப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி வருகிறது. அ.ம.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் எவரும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை சேதாரப்படுத்தவில்லை.
இது அ.தி.மு.க-வினருக்கு பெரும் உற்சாகத்தையும், அ.ம.மு.க-வினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்திவருகிறது. வாக்குப் பதிவுக்கு முந்தைய தினங்களில், பெரிய கட்சிகள் மீது பணப்பட்டுவாடா புகார்கள் பறந்துவந்த நிலையில், அ.ம.மு.க கூட்டணியிலோ, `தேர்தல் செலவுக்குக்கூட தலைமை காசு தரவில்லை’ என்ற புலம்பல்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. இதுவும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகியிருக்குமோ என்று விவாதித்து வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இந்த செய்தியையும் படிங்க……
வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் வழிமுறைகள் – வெற்றி சான்றிதழ் யாருக்கு..??
‘வாக்கு எண்ணிக்கையின் அடுத்தடுத்த சுற்றுகள், இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளை மறைத்து வைத்திருக்கிறதோ…’ என்ற ஆவலுடன் பொதுமக்கள் உற்றுக் கவனித்து வருகின்றனர்.