அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
திமுகவில் முதல்கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக நேற்று (மார்ச் 5) வெளியிட்டது.
அதிமுக தேர்தல் அறிக்கை: முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை:
அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
மேலும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.