அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்த உதவும்- அருமருந்து..!! - Tamil Crowd (Health Care)

அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்த உதவும்- அருமருந்து..!!

 அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்த  உதவும்- அருமருந்து..!!

அதிகப்படியான பித்தத்தை சமநிலைப்படுத்த உதவவும், பித்தத்தினால் உண்டாகக்கூடிய கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவும் சூரணம். 

தேவையான பொருள்கள்

வல்லாரைக் கீரை ( உலர்ந்தது) – 100 கிராம்

முசுமுசுக்கைக் (MUSU MUSUKKAI)கீரை ( உலர்ந்தது) – 100 கிராம்

நெல்லி வற்றல். – 100 கிராம்

செய்முறை

  • முதலில் தேவையான அளவு வல்லாரைக் கீரை மற்றும் முசுமுசுக்கைக் கீரை ஆகியவற்றை எடுத்து எடுத்து சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் நன்கு உலர வைத்து மேற்கூறிய அளவு எடுத்துக் கொள்ளவும்.
  •  நெல்லி வற்றல் எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
  •  பின்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து அரைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.
இந்த செய்தியையும் படிங்க…

இந்த சூரணம் அதிகப்படியான பித்த தன்மை உள்ளவர்களுக்கும் , பித்தத்தினால் உண்டாகக் கூடிய கிறுகிறுப்பு மற்றும் மயக்க உணர்வு குறைபாட்டினால் துன்பப்படுபவர்களுக்கு உதவும் அருமருந்தாகும்.

 மேற்கூறிய இந்த சூரணத்தை தயார்செய்து தினமும் அதிகாலை வேளை இரண்டு கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.

Leave a Comment