“அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும்” – அமைச்சர் பொன்முடி..!!
‘அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும்!’ – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகள்: அலட்சியம் காட்டக்கூடாத அறிகுறிகள் என்னென்ன..??
தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும் என முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் அளித்த போது, ‘ஆன்லைன் மூலம் மூன்று மணி நேரம் தேர்வு நடத்த திட்டமித்துள்ளோம். தேர்வுக்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை.
ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற விரும்பினால் தேர்வு எழுதலாம். அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளார்களோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனா வைரஸின் 2-வது அலையில் இருந்து பாதுகாக்கும் இரட்டை முகக்கவசம்…!!!
இதற்கு நடைபெற்ற தேர்வில் சுமார் 4.25 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1.10 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்’ என அவர் தெரிவித்துள்ளார்.