அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்- தள்ளிவைப்பு..!!
அடுத்த மாதம் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளன. மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த இறுதிப் பருவத் தேர்வுகளை சென்னை ஐஐடி(IIT) ஒத்திவைத்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
ஆசிரியர்களை கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது- கல்வி இயக்குனர் சுற்றறிக்கை..!!
இதேபோல் மே 3ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெற வேண்டிய பருவத்தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழகமும் ஒத்திவைத்துள்ளது. மே 17 முதல் பருவத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்த சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்ததாக தெரிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்படும் தேர்வுகளின் மறுத்தேர்வுகளுக்கான தேதி கொரோனா பாதிப்பு குறைந்த பின் அறிவிக்கப்படும் என சென்னை ஐஐடி(IIT) மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.