அக்டோபர் 1 முதல் இந்த வங்கிகளின் காசோலை செல்லாது- PNB அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

அக்டோபர் 1 முதல் இந்த வங்கிகளின் காசோலை செல்லாது- PNB அறிவிப்பு..!!

 அக்டோபர் 1 முதல் இந்த வங்கிகளின் காசோலை செல்லாது- PNB அறிவிப்பு..!!

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (Oriental Bank Of Commerce) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா(United Bank Of India)  இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை இந்த இரண்டு பழைய வங்கியின் காசோலைப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

இந்த செய்தியையும் படிங்க….

5 ஆண்டுகளில் 7 லட்சம் சேமிப்பு-ரெக்கரிங் டெபாசிட் திட்டம்..!! 

இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (Oriental Bank Of Commerce) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா(United Bank Of India) வங்கிகளின் பழைய காசோலைப் புத்தகங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி(Punjab National Bank) அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய E-OBC மற்றும் E-UNI காசோலை புத்தகத்தை, PNB வங்கிக் கிளையில் புதிய காசோலை புத்தகமாக மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உதவி அல்லது கூடுதல் தகவல்களுக்கு வங்கியின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-180-2222 ஐ தொடர்பு கொள்ளலாம் என PNB வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Comment